என் மலர்
உள்ளூர் செய்திகள்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர்.
- அடுத்த வாரம் ஆவணி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும்.
இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்ப டுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்வர்.
அதன்படி இன்று ஆவணி மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
பல பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
ஆவணி ஞாயிறு தோறும் மாரிய ம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இன்று மாரியம்மனுக்கு தங்கப்பாவாடை அலங்காரம் செய்யப்பட்டது .
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனம் உருகி தரிசித்தனர்.
பல பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அடுத்த வாரம் ஆவணி கடைசி ஞாயிறு என்பதால் இதைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.