என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி

- பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் - சக மாணவர்களிடையே நட்புறவை வளர்த்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக நடனம், பேச்சுப்போட்டி, எழுத்துப் போட்டி கட்டுரை போட்டி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் சமத்துவம், சகோதரத்துவம், மாற்றுத்திறனாளி மாணவர்கள்-சக மாணவர்களிடையே நட்புறவை வளர்த்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன், அபிநய சிரோன்மணி, ஆசிரியை ஜெயந்தி, சிவா, மேற்பார்வையாளர் வட்டார மைய ஒருங்கிணைப்பாளர், சிறப்பு பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.