search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மீண்டும் இயங்கியது
    X

    பயன்பாட்டிற்கு வந்த லிப்ட்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மீண்டும் இயங்கியது

    • லிப்ட் பணிகள் செயல்பாட்டிற்கு வர தாமதமானதால் அவசர பிரிவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
    • லிப்ட் சேவையை நோயாளி கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத வர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்திற்கு அரசு மருத்துவ கல்லூரி வந்ததையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி நவீன வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட 5 மாடி கட்டிடத்தை அமைச்சர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    இங்கு அமைக்கப்பட்டி ருந்த லிப்ட் பணிகள் முடிவடையாமல் இருந்த தால், செயல்பாட்டிற்கு வர தாமதமானது. இதனால் அவசர பிரிவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பணிகளை விரைவில் முடிக்க கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவிட்டார். இந்நிலை யில் பணிகள் நிறைவடைந்து லிப்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

    இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ள்ளனர். சிரமமின்றி லிப்ட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த லிப்ட் சேவையை நோயாளி கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத வர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளுமாறு டீன் சுகந்தி ராஜகுமாரி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×