என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

- மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
- பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.