என் மலர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
- மத்திய மாநில அரசின் 60.40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் ”தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்” என்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
- வருகிற 4-ந் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய மாநில அரசின் 60.40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்" என்ற திட்டமாக செயல் படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம், கிராமபுற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பி னர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன் "ஊரக இளைஞர் களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுவருகிறது.
இதன் மற்றொரு அங்கமாக ஊரக மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.
தற்போது தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) சார்பில் வருகிற 4-ந் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.