search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் நியமனம்- தூத்துக்குடிக்கு பெருமாள், சங்கரன்கோவிலுக்கு ஜோயல்
    X

    பெருமாள், ஜோயல்

    தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் நியமனம்- தூத்துக்குடிக்கு பெருமாள், சங்கரன்கோவிலுக்கு ஜோயல்

    • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஆலங்குளத்துக்கு சுரேஷ்ராஜன் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் மற்றும் விளாத்திக்குளத்துக்கு தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுசாமி, கோவில்பட்டிக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செய லாளர் ஜோசப்ராஜ், திருச் செந்தூருக்கு விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, ஸ்ரீவை குண்டத்துக்கு சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் டாக்டர் சபி, ஓட்டப்பிடாரம் (தனி) விவசாய அணி துணை செயலாளர் முது குளத்தூர் முருகவேல் ஆகி யோர் தொகுதி பார்வையா ளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், வாசுதேவநல்லூர் (தனி) விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, கடையநல்லூர் தொண்டரணி துணை செய லாளர் ஆவின் ஆறுமுகம், தென்காசி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், ஆலங்குளத்துக்கு தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன் ஆகியோர் தொகுதி பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள னர்.

    நெல்லை மாவட்டம், நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை மகளிரணி செய லாளர் ஹெலன் டேவிட்சன், அம்பை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செய லாளர் சிவராஜ், நாங்குநேரி மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டார்வின், ராதா புரம் வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி பார்வையாளராக நியமிக்கப் பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்குரிய மாவட்ட செயலாளருடன் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை செயல்படுத்திட வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதி யிலும் தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்த்து 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் 'உடன்பிறப்புகளாய் இணை வோம்' இயக்க பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இப்பணி விவரங்களை தலைமை கழகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×