search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும் -  தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும் - தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

    • ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 58-வது வார்டு காமராஜ் நகரில் உள்ள பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை தி.மு.க.வினர் மக்களிடம் எடுத்து சென்று கூற வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 58-வது வார்டு காமராஜ் நகரில் உள்ள பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளரும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனுமான ஆஸ்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தலின்படி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை தி.மு.க.வினர் மக்களிடம் எடுத்து சென்று கூற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. அதிகபபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மேலும் இதனை தீர்மானமாக நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் பகுதி அவை தலைவர் வெள்ளப்பாண்டி, தி.மு.க. வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், கருப்பசாமி, பகுதி நிர்வாகிகள் கல்பனா ரகு, அந்தோணிராஜ், பகுதி அமைப்பாளர்கள் மாலா சின்கா (மகளிரணி), சித்திரை புஷ்பம் (மகளிர்தொண்டரணி), அருண் (இளைஞரணி), ராஜ், சக்தி (மாணவரணி), செல்வக்குமார் (வர்த்தகஅணி), ராஜ் (இளைஞரணி), சண்முகராஜ் (விவசாய அணி), மகளிர் தொண்டரணி பகுதி துணை அமைப்பாளர் பானுமதி, கவுசல்யா, வட்ட நிர்வாகிகள் பாஸ்கர், சீனிவாசகம், போஸ், செ.முருகேசன், முருகேசன், முத்துமாணிக்கம், காளிராஜ், ராதாகிருஷ்ணன், பாபுராஜ், கணேசன் மற்றும் கிருஷ்ணமணி, அற்புதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×