search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் நாய் கண்காட்சி
    X

    கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் நடந்த நாய் கண்காட்சியை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரியில் நாய் கண்காட்சி

    • சிப்பிப்பாறை, லேபர்டாக், பொமேரியன், பக், டால்மேசன், அமெரிக்க புல்லி, கிரேடன், சைபே–ரியன் அஷ்கி, பிக்புள் உள்பட 37 வகையான 170 நாய்கள் கலந்து கொண்டன.
    • கண்காட்சியில் நாய்களின் குணம், கீழ்படிதல், தடுப்பூசி விவரம், ஆரோக்கியம் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செப்பர்ட், கன்னி, பெல்ஜியம் மெலோ, அக்கிடா, சிப்பிப்பாறை, லேபர்டாக், பொமேரியன், பக், டால்மேசன், அமெரிக்க புல்லி, கிரேடன், சைபே–ரியன் அஷ்கி, பிக்புள் உள்பட 37 வகையான 170 நாய்கள் கலந்து கொண்டன.

    கண்காட்சியில் நாய்களின் குணம், கீழ்படிதல், தடுப்பூசி விவரம், ஆரோக்கியம் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில், நாமக்கல் கால்ந–டைத்துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் இசக்கியேல் நெப்போலியன் நடுவராக பங்கேற்றார். மேலும், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மரியசுந்தர், உதவி இயக்குனர் டாக்டர் அருள்ராஜ், ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் ஒவ்வொரு வகையான நாய்களுக்கும் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த நாய்களின் உரிமையா–ளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த கண்காட்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாய் பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×