என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூரில் நடந்த திராவிட மாடல் பயிற்சி பாசறையில் திருச்சி சிவா எம்.பி. பேசியபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
திருச்செந்தூரில் இளைஞர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு
- பயிற்சி பாசறைக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார்.
- திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுயில் உள்ள இளைஞர்களுக்கு திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.
இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,
திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் பயிற்சி ஆசிரியர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.
முன்னதாக மாநில சுயாட்சி குறித்து எழுத்தாளர் மதிமாறன் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், யூனியன் தலைவர்கள் ஜனகர் (ஆழ்வார்்திருநகரி), பாலசிங் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், கானம் நகர செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமார் ரூபன் முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நன்றி கூறினர்.