என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சீர்காழி காவல் துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- போதை பொருளால் ஏற்படும் மனபாதிப்பு, உடல்பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
சீர்காழி:
சீர்காழி காவல் துறை சார்பில் சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பால முருகன் தலைமை வகித்தார். சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் ஜெயகிருபா, தலைமை காவலர் செல்வ முருகன், தனிப்பிரிவு போலீஸ்சார் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சீர்காழி காவல்ஆய்வாளர் சிவக்குமார் பங்கேற்று போதை பொருளால் ஏற்படும் மனபாதிப்பு, உடல்பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார். இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்று போதை பொருள்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனர்.
இதேபோல் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று பேசினார்.