என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கூடத்தில் குவிந்து கிடக்கும் போதை பொருட்கள்
- பள்ளியில் இளைஞர்கள் மது, கஞ்சா, சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்தி மதுக்கூடாரமாக பயன்னடுத்தி வருகின்றனர்.
- இனிமேல் இது போல் நடைபெறாதவாறு பள்ளிக்கூடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்
காவேரிபட்டினம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான பழைய பள்ளிக்கூடம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த பள்ளியில் இளைஞர்கள் மது, கஞ்சா, சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்தி மதுக்கூடாரமாக பயன்னடுத்தி வருகின்றனர்.
இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
16 லிருந்து 18 வயது உள்ள வாலிபர்கள் இங்கு இரவில் 12 மணி வரை மது, கஞ்சா, சிகரெட் போன்றவற்றை உபயோகப் படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் நாங்கள் வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. இது பற்றி அந்த வாலிபர்களிடம் இங்கு வரக்கூடாது என்று எச்சரித்தால் அவர்கள் எங்களை தகாத வார்த்தையில் திட்டுகின்றனர்.
எனவே இனிமேல் இது போல் நடைபெறாதவாறு பள்ளிக்கூடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இடத்தில் உரிமையாளரை அழைத்து பேசி அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையில் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.