என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் இன்று அதிகாலை வாகனம் மோதி 2 பேர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
- இதில் பாலமுருகன் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது21), மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயித் (22) இவர்கள் இருவரும் ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் கடந்த 6 மாதமாக தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
இரவு பணி முடித்து இன்று அதிகாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றனர். அப்போது பத்தலபள்ளி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் பாலமுருகன் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ஜெபித்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.