search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- தென்காசி  கலெக்டர்  தகவல்
    X

    ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- தென்காசி கலெக்டர் தகவல்

    • கல்வி உதவித்தொகை இணையதளம் கடந்த மாதம் 31-ந் தேதி தொடக்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி சிறப்பு கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணைய தளம் கடந்த மாதம் 31-ந் தேதி தொடக்கப்பட்டது. வருகிற 28-ந்தேதி முடிவடைகிறது.

    தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ,மாணவிகள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதிசான்று உள்ளிட்ட பிற ஆவணங் களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையின் கீழ் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளளப்படுகிறார்கள்.

    முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்று தற்போது புதுப்பித்தல் இனங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களும் கட்டாயம் இவ்விணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×