என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஏட்டு-தி.மு.க. பிரமுகர் இடையே நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது- ஓசூரில் எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் தகவல் ஏட்டு-தி.மு.க. பிரமுகர் இடையே நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது- ஓசூரில் எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/01/1739312-003.jpg)
ஏட்டு-தி.மு.க. பிரமுகர் இடையே நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது- ஓசூரில் எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் தகவல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டிசம்பர் மாதம் 19-ந்தேதி இவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார்.
- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கியிருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து மீட்டு, அங்கிருந்து அழைத்து வரப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேரு நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் விஸ்வகுமார்(23), பி. இ படித்துள்ள இவர், கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார்.
இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
ஆனால் 8 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், விஸ்வகுமாரின் பெற்றோர், சென்னையில் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.இதனையடுத்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக் கூருக்கு, இதுதொடர்பாக கடிதம் எழுதி விஸ்வகுமாரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட நடவடி க்கைகள் மற்றும் இளைஞர் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விஸ்வகுமார் காணாமல் போன வழக்கில், டி.ஜி.பி.சைலேந்திரபாபுவின் உத்தரவையடுத்து எனது மேற்பார்வையில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், அட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இளைஞரை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அவரது செல்போன்கள் சுவிட்ச்-ஆப் செய்ய ப்பட்டிருந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கியிருந்ததை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து மீட்டு, அங்கிருந்து அழைத்து வரப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில், போலீஸ் ஏட்டு மற்றும் தி.மு.க. பிரமுகர் ஒருவர் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சி.எஸ்.ஆர். போடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.