என் மலர்
உள்ளூர் செய்திகள்
கூடலூர் நாடுகாணி பகுதியில் யானை பாதுகாப்பு கருத்தரங்கு
- யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
- யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.
இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.
தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.