என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
செட்டியாபத்து ஊராட்சியில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்
Byமாலை மலர்19 Nov 2022 2:26 PM IST
- முகாமில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது
- செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்
உடன்குடி:
செட்டியாபத்து ஊராட்சி மன்றபகுதியில் யானைக்கால் நோய் கண்டறியும் சோதனை முகாம் நடந்தது. இதில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் மஞ்சுளா, ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ஆழ்வார், குருசாமி, அந்தோணிராஜ், ராஜகுமார், சுபாஷ், முத்து செல்வன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ரத்த மாதிரி எடுத்துச் சென்றனர்.
Next Story
×
X