என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
1,440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
By
மாலை மலர்19 Nov 2022 2:38 PM IST

- அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
- அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாருதி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அம்மாபாளையம் பகுதியில் 1,040 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 1,440 கிலோ ரேஷன் அரிசியையும், அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பவானிசாகரை சேர்ந்த கண்ணன் (47) என்பவரை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X