என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வீட்டில் பதுக்கிய 1,440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By
மாலை மலர்10 Nov 2022 3:22 PM IST

- ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X