என் மலர்
உள்ளூர் செய்திகள்

அந்தியூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய புறவழி சாலை அமைக்க வேண்டும்

- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.
- புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இரு ந்து நாள்தோறும் கல்லூரி வாகனம், பள்ளி வாகனங்க ள், காலை நேரத்தில் ஏராளமாக பஸ் நிலையம் பகுதி வழியாக செல்கின்றது.
மேலும் அந்தியூர் வழியாக பர்கூர், கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.
இதனால் கனரக வாகனங்க ளும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களிலும் அதிக அளவில் செல்வதால் பஸ் நிலையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆங்கங்கே நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்த நெரிசலை தவிர்க்க பவானி சாலையில் உள்ள சந்தியபாளையம் பிரிவு (மங்களம்பள்ளி அருகில்) பகுதியில் இருந்து தவிட்டுப்பாளையம்-பிரம்மதேசம் இணைக்கும் சாலை வழியா க புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசலும் குறையும், வாகனங்கள் செல்வதற்கு குறைந்த தூரமே வரும் என்பதால் இந்த புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வல ர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றார்கள்.