search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவின்றி தவித்த கணவன், மனைவி முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
    X

     மீட்கப்பட்ட கணவன், மனைவியை சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம் முதியோர் இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி தவித்த கணவன், மனைவி முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

    • போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர்.
    • முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குறித்து பொதுமக்கள் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்திரவின் பேரில் போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர். இதில் அவர்கள் முருகேஷ் (80), அவரது மனைவி கண்ணம்மாள் (70).

    இருவரும் கணவன், மனைனவி என்பதும், தங்க ளுக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற நிலையில் 2 பேரும் இப்படி ஊர், ஊராக சென்று தங்குவதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரை யும், சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பொன்நகர் பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×