search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
    X

    தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

    • அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
    • பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன், எல்.பி.எப். மாவட்ட பொருளாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் (இன்று) 15-ந் தேதி முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையரின் அறிவுரை ப்படி வருகின்ற 22-ந் தேதி வரை தற்காலி கமாக ஒத்தி வைப்பது, பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். சங்க செயலாளர் கிருஷ்ணன், ஆதி தமிழர் தூய்மை தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×