என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/12/1760659-untitled-2.jpg)
X
தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
By
மாலை மலர்12 Sept 2022 3:00 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
- இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X