என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கைதான வாலிபர் ஈரோடு கிளை சிறையில் அடைப்பு கைதான வாலிபர் ஈரோடு கிளை சிறையில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/31/1738961-siraii.jpg)
கைதான வாலிபர் ஈரோடு கிளை சிறையில் அடைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.
வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.