என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேளாண் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெற அழைப்பு வேளாண் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெற அழைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/19/1852096-04.webp)
வேளாண் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெற அழைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
- செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேலையாட்களுக்கு மாற்றாக, வேளாண் எந்திரமயமாக்கல் தேவைப்படுகிறது.
அதிக விலை, உயர்ந்த வேளாண் எந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் வாங்குவது சிரமம்.
எனவே விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்கி குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி களை பயன்படுத்தலாம்.
அறுவடை காலங்களில் நெல் அறுவடை எந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது பிற இடங்களில் வாடகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைந்து விவசாயிகள் சிரமப்படுவர்.
வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரம் மூலம் தீர்வு பெறலாம்.
நெல், மக்கா சோளம், பயறு, தானிய வகைகள் அறுவடை செய்யும்போது எந்திர அறுவடை செய்ய எந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், மொபைல் எண் விபரத்தை, வட்டார, மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண் பொறியியல் துறை மூலம் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 15 சக்கர வகை அறுவடை எந்திரங்களும், 5 டிரேக் வகை அறுவடை எந்திர ங்களும் உழவன் செயலில் பதிவேற்றப்படுகிறது.
விவசாயிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.