என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அனுமதியின்றி மது விற்ற 8 பேர் மீது வழக்கு அனுமதியின்றி மது விற்ற 8 பேர் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/08/13/1931843-01.webp)
X
அனுமதியின்றி மது விற்ற 8 பேர் மீது வழக்கு
By
மாலை மலர்13 Aug 2023 2:53 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை மேட்டுப்புதுரை சேர்ந்த சுரேஷ் (வயது 38), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பைரவன் (49), மதுரை மாவட்டம் ஆண்டி ப்பட்டி சேர்ந்த சுரேஷ்பவன் (42),
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஹரி கிரு ஷ்ணன் (32), கோவை மாவ ட்டம் ராஜீவ் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (45), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த குப்புசாமி (48), சூலூர் பகுதியை சேர்ந்த பரமசிவன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X