என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
- ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது.
- கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஈரோடு:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.
கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் வீட்டின் முன் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்கவிட்டும், வீட்டுக்குள் குடில்கள் அமைத்தும் இருந்தனர்.
இது தவிர தேவாலயங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்க ப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.
பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்தில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் சிறப்பு பிரா ர்த்தனை நடைபெற்றது.
பிரார்த்தனை முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். உறவினர்கள் நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை களை கட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்