என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலை தடுத்து நிறுத்தம்

- போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் பகுதியில் சுமார் 10 அடி விநாயகர் சிலை நிறுவப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மினி ஆட்டோ வில் விநாயகர் சிலையுடன் மேள தாளங்கள் முழங்க போலீஸ் நிலையம் அருகே 300-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி முன் அனுமதி இல்லாமல் வந்து உள்ளீர்கள். நாளை (வெள்ளிக்கிழமை) தான் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவித முன்அனுமதி இன்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளீர்கள். இதற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து விநாயகர் சிலை ஆற்றில் கரைக்க எடுத்து செல்கிறோம். அனுமதிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரி க்கை விடுத்தனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதையடுத்து மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் அவரது தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
அதன் பிறகு சத்தியமங்கலம் தாசில்தார் சக்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை மட்டும் எடுத்து சென்று ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்க ப்பட்டது.
பொதுமக்கள் ஊர்வலமாக தாரை தப்பட்டை முழுங்க செல்ல க்கூடாது என அறிவுறுத்த ப்பட்டது. இதனால் போரா ட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.