என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பிளாக் மாரியம்மன், சருகு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை பிளாக் மாரியம்மன், சருகு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/23/1920226-02.webp)
பிளாக் மாரியம்மன், சருகு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு மாரியம்மன், மற்றும் பிளாக் மாரியம்மன் கோவி லில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரிய ம்மனுக்கு பால், தயிர், திரு மஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்ய ப்பட்டது.
இதைத்தொட ர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து விளக்கு பூஜையை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி கயிறு, வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.
இதே போல் புஞ்சை புளியம்பட்டி சருகு மாரியம்மன் கோவிலில் ஆடி பூரத்தை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாரா தனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு விளக்கு பூஜை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடு. வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.