என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/01/27/1827404-02.webp)
X
கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது
By
மாலை மலர்27 Jan 2023 3:00 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மேக்கூர் பகுதியில் கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள மரத்தினடியில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (67) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 கேரள மாநில லாட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X