என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி
- அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
- இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.
பவானி:
ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.