என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈங்கூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
- இதனால் ஈங்கூர் துணை மின் நிலையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது.
ஈரோடு:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை (வியாழக்கிழமை) சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈங்கூர் துணை மின் நிலையம் பாலப்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் புலவனூர் மின் பாதை பகுதிகளான ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், புலவனூர், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story