search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு, மஞ்சள், பானை விற்பனை களை கட்டியது

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

    தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

    கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.

    இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.

    Next Story
    ×