என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருடிய மாட்டுடன் சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
- சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் ஒரு வீட்டின் முன்பு கட்டியிருந்த காளை மாட்டை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.
ஈரோடு, செப். 11-
ஈரோடு டவுன் போலீசார் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மாட்டுடன் சென்று கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த காட்டச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோகுல் (23) என்பதும், ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டின் முன்பு கட்டியிருந்த காளை மாட்டை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த மாட்டின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாட்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கோகுல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.