search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரணாம்பாளையம் அணைகட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
    X

    காரணாம்பாளையம் அணைகட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?

    • காரணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
    • பெரும்பாலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு - கரூர் செல்லும் ரோட்டில் உள்ளது காரணாம் பாளையம் அணைக்கட்டு. கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி ஊராட்சிக் குட்பட்ட காரணாம் பாளையத்தில் இந்த அணைக் கட்டு அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது இந்த அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் இருந்து கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள காகித ஆலைக்கு என தனியாக வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் புகழூர் வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்கால் மூலம் காகித ஆலைக்கு தண்ணீர் செல்வதுடன் விவசாயிகளும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது.

    ஈரோட்டில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றையொட்டி எந்த சுற்றுலா தலமும் இல்லை. திருச்சியில் முக்கொம்பில் மட்டுமே பூங்கா உள்ளது. ஆனால் வழியில் எந்த பகுதியிலும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலம் இல்லை. இதனால் காரணாம்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்த அணைக்கட்டுக்கு ஈரோடு மட்டுமல்லாது கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டில் குளித்துவிட்டு அங்கேயே மீனவர்கள் பிடிக்கும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு என அங்கேயே ஏராளமான மீனவர்கள் மீன்களை பிடித்து அவர்களுக்கு தேவையானவற்றை சமைத்துக் கொடுத்து வருகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருபவர்கள் அணைக்கட்டில் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கும் மற்றும் குழந்தைகளின் விளையாடுவதற்கும் போதுமான வசதிகள் இல்லை. மேலும் கழிவறைகள் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளா–கின்றனர்.

    இந்த காரணாம் பாளையம் அணைக்கட்டிற்க்கு தினசரி மட்டுமில்லாத பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    இதனால் காரணாம்பாளையம் அணைக் கட்டை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் கூறியதாவது:

    அணைக்கட்டை நம்பி காரணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அணைக் கட்டுக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.

    ஆனால் அவர்கள் குளித்துவிட்டு உடை மாற்று வதற்கோ கழிவறைக்கு செல்வதற்கும் போதுமான வசதிகள் இல்லை. இதனால் தமிழக அரசு காரணாம்பாளையம் அணைக்கட்டை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆனால் இதுவரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வு அறையும் கழிவறையும் பெண்கள் உடைமாற்று அறையும் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாமல் சாலை ஓரத்திலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அரசு விரைவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் காரணாம் பாளையம் அணைக்கட்டுக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றின் கரை பகுதியான நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு அங்கு சிறுவர் பூங்கா, பயணிகள் ஓய்வறை, கழிவறை, பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து ள்ளனர்.

    அதேபோல் எதிர்க்க ரையில் உள்ள காரணா ம்பாளையம் அணைக்கட்டு பகுதியிலும் அவ்வாறு சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×