என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/02/04/1831352-03.webp)
X
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
By
மாலை மலர்4 Feb 2023 3:07 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
- அதில் மின்கசிவு இருந்துள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (43). கட்டுமான தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த துணை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. இதனால் மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இது குறித்து வெள்ளித்திருப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
X