என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து சாவு

- வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார்.
- சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு சாமி. இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.
இவரது மனைவி முத்து லட்சுமி (வயது 29). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்துலட்சுமி கணவன் இறந்தது முதல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ த்தன்று வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.