search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாருக்கு 100 ஆண்டுகளாக பழமை மாறாத மரியாதை
    X

    போலீசாருக்கு 100 ஆண்டுகளாக பழமை மாறாத மரியாதை

    • பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர்.
    • சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.

    சென்னிமலை,

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தரும் பழமை மாறாத மரியாதை 100 வருடங்களுக்கும் மேலாக இன்னும் தொடர்கிறது.

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும், அதே போல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டாலும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை. மேலும் ஊர்வலமாக போலீஸ் நிலையத்துக்கு செல்லும் தேரோட்டி, கோவில் செயல் அலுவலர், பணியாளர்களுக்கு இனிப்பு, காரம், டீ கொடுத்து மரியாதை செய்வார்கள்.

    இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியமரியாதை தொடர்வதாக பெரியவர்கள் தகவல் கூறுகிறார்கள்.

    இன்னும் இந்த மரியாதை மாறால் நேற்று தொடர்ந்தது. இந்த மரியாதை தைப்பூச தேர் திருவிழா மட்டும் அல்லாமல் பங்குனி உத்திர தேரோட்டத்திலும் நடக்கும் நேற்று மாலை பங்குனி உத்திர தேர் நிலைசேர்ந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.

    Next Story
    ×