என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். 

    நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
    • தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டது

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவனம், நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் சங்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    முக்கிய வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

    Next Story
    ×