என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆடுதுறையில், பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி
- மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன.
- விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும்போது:-
இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். அங்கக வேளாண்மையில் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன . விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் (பொ ) ராஜப்பன், முனைவர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உளவியல் துறை இணை பேராசிரியர் இளமதி உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி பாரம்பரிய நெல் பயிரிடுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் முனைவர்கள் தண்டாயுதபாணி, புஷ்பா, ஆனந்தி, சித்ரா, அருள்செல்வி, முன்னோடி விவசாயி தளபதி, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் இந்த கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா நன்றி கூறினார்.