என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தென்காசி வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு தென்காசி வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/04/1817016-5spltrain.webp)
தென்காசி வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறப்பு ரெயில் வருகிற 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும்.
- வேளாங்கண்ணியில் இருந்து 8 மற்றும் 15 ஆகிய ஆகிய நாட்களில் மாலை 6.40 மணிக்கு புறப்படும்.
தென்காசி:
கேரளா மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயிலாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் 2 மார்க்கமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ரெயில்கள் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பயணிகள் அதிகமானோர் அந்த ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் காரணமாக அதனை நீட்டிப்பு செய்து தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த ரெயில்களின் சேவை வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில் (06035) வருகிற 7 மற்றும் 14 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு மார்க்கமாக வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 8 மற்றும் 15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.