என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் அதிக வெப்ப சலனம்அதிகாலையில் திடீர் மழை
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வெயில் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர்.
மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இரவு நேரங்களில் இதமான காற்று வீசி வருகிறது. இருப்பினும் பகலில் நிலவும் வெப்பம் காரணமாக வீடுகளில் புழுக்கம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலானோர் இரவு வீட்டின் வெளியே வெகுநேரம் படுத்து தூங்குகின்றனர்.
திடீர் மழையால் மகிழ்ச்சி
இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை கன பெய்தது. சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு இந்த மழை பெய்தது.
சேலம் 4 ரோடு, 5 ரோடுஇ அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, ஏற்காடு அடிவாரம், அயோத்தியாப்பட்டணம், இரும்பாலை, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் 54 மில்லி மீட்டர் மழை பதிவானது. மழையின்போது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதாவது விட்டு விட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. மழை முடிவடைந்ததும் மின் விநிேயாகம் சீரானது. இந்த திடீர் மழையால் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.