என் மலர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டுகோள்
- பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
- தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயி விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
மேலும், விதைகளை வாங்கும் முன்னர், அந்த விதைக்குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கை யினை கேட்டு சரிபார்க்க வேண்டும். விதைகளின் தரத்தினை அறிந்துக்கொள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி, விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலு வலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வறி க்கையினை பெற்றிடுங்கள்.
விதைக்குவி யல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு வேளாண்மை துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.