என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 Oct 2022 3:00 PM IST
- ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- சேர்ந்தான்குளத்தில் சிலர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
நெல்லை:
தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், நிர்வாகிகள் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பருத்திபாடுக்கு உட்பட்ட சேர்ந்தான்குளத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே அதனை மீட்டு தரவேண்டும். மேலும் அங்குள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Next Story
×
X