என் மலர்
உள்ளூர் செய்திகள்
திடீர் மழையால் குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி - பருத்தி பயிரிட்டோர் கலக்கம்
- மழையில் நனைந்த பருத்தி, தரம் மாறுபடுவதால், எதிர்பார்த்த விலை போகாமல், வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என விவசாயிகள் கலக்கம் அடைகின்றனர்.
- மழைநீர் பெய்வதால், நெல் விதை ஊட்டும் உடன் வளரும் என்றும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் திடீர் மழையால், குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி, பருத்தி விவசாயிகள் கவலை.
கடந்த கோடைகாலத்தில் காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால், பருவ நிலை மாற்றத்தின் காரணமாக, கோடையில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால் கோடைகால சாகுபடி ஆன, பருத்தி விவசாயம் விளைச்சல், பாதிப்பு ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக, பருத்தி செடி வளர்ச்சி பாதித்ததால், விவசாயிகள் தங்களின் பருத்தி விவசாயத்தை, காக்கும் வகையில், பல்வேறு பூச்சி மருந்துகளையும், உரங்களை பயன்படுத்தி, மழை பாதிப்பில் இருந்து செடிகளை பாதுகாத்து, தற்போது பருத்தி செடி, காய் வெடித்து, பஞ்சு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீர் கன மழையால், பருத்தி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பருத்தி மழையில் நனைவதால், கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு, எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மேலும் மழையில் நனைந்த பருத்தி, தரம் மாறுபடுவதால், எதிர்பார்த்த விலை போகாமல், வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என விவசாயிகள் கலக்கம் அடைகின்றனர்.
திடீர் மழை, பருத்தி விவசாயிகளுக்கு எதிர்பார்த்த, வருமானத்தை தடுக்கும் என அஞ்சுகின்றனர். இன்னும் பத்து தினங்களுக்குள், பருத்தி சாகுபடி பணிகள் முடிவடையும். இந்நிலையில் திடீர் மழை பருத்தி விவசாயத்தை கலக்கம் அடையச் செய்துள்ளது. மேலும் தற்போது பெய்து வரும், மழை குறுவை சாகுபடி விவசாயிகளை அடைய செய்துள்ளது. பல விவசாயிகள், விதைகள் ஊறப்போட்டு, நாற்றங்கால் அமைத்து, விதை விதைத்து வரும் நிலையில், மழை, குறுவை சாகுபடிக்கு, ஏற்புடையதாக அமையும் என்றும், மழைநீர் பெய்வதால், நெல் விதை ஊட்டும் உடன் வளரும் என்றும், மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
நாற்றங்கால் பயிர் செழிப்புடன் வளர்வதற்கு, இந்த முறை மிகவும் பயனுள்ளதாக அமையும் என குறுவை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதமே காவிரி நீர் திறந்த நிலையில், தற்போது பெய்து வரும் கன மழையும் குறுவை சாகுபடிக்கு பயிர்கள் ஊட்டம், உடன் வளர, பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பருவத்தே பெய்யும் மழை, நீர்ப்பாசனம், மேலும் தூர்வாரி வாய்க்கால்கள், என குறுவை சாகுபடிக்கு சாதகமாக பல புறச்சூழலில் அமைந்துள்ளதால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி, சிறப்பாக அமையும் என விவசாயிகள் கருதுகின்றனர். இன்று பெய்த திடீர் மழை, குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு கவலையையும் தந்துள்ளது.