என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருமந்துறை கைககான் வளவு திட்டத்திற்கு விவசாயிகள் சார்பில் மலர் தூவி வரவேற்ற காட்சி.
கைக்கான் வளவு திட்டத்திற்கு விவசாயிகள் மலர் தூவி சிறப்பு வழிபாடு

- இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
- வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது வசிஷ்ட நதி. இந்த நதிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர் வசிஷ்ட நதி வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இதனால் வழியெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாக மழை இல்லாததால் வசிஷ்ட நதி வறண்டு காணப்பட்டது.
கைக்கான் வளவு திட்டம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கருமத்துறை கைக்கான் வளவு பகுதியில் இருந்து நீரை வாய்க்கால் மூலமாக கரிய கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு வந்து, அதன் பிறகு அந்த நீரை வசிஷ்ட நதியில் கொண்டு செல்ல புதிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்போடும், ஒத்துழைப்போடும் செயல்ப டுத்தப்பட்டு உள்ளது.
பொங்கலிட்டு வழிபாடு
இதையடுத்து, இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராள மானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுக தர்ம குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கற்பூர தீபத்தை உள்ளே இறங்கி வழிபாடு நடத்தினார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தி உள்ளார் என்றார்.
விவசாயிகள் நன்றி
இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ, ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ, கெங்கவல்லி நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்டச் செயலா ளர் ஜெயகாந்தன் மற்றும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.