search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவூதி அரேபியாவில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி:அமைச்சர்கள்  வழங்கினர்
    X

    சவூதி அரேபியாவில் உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்துக்கு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சி.வெ.கணேசன் ஆகியோர் நிதி உதவி வழங்கிய காட்சி.

    சவூதி அரேபியாவில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி:அமைச்சர்கள் வழங்கினர்

    • இளங்கோவன் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.
    • இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்ப ருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசை னிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகை காரண மாக, சவூதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன்ன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.

    இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தா னிடம் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவனின் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து, பின்னர், மங்கலம் பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர், இளங்கோ வனின் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர். அப்போது, விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனி ருந்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரிழந்த இளங்கோவ னுக்கு கவுரி என்கிற மனை வியும், காயத்ரி (வயது. 21) என்கிற மகளும், ஜீவன்ராஜ் (வயது.12) என்கிற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×