என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருப்பூர் கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்
- கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.
கருப்பூர்:
சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,
தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்