என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பிளஸ்-2 கணித தேர்வில் விடை எழுத மாணவர்களுக்கு உதவி: ஆசிரியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்8 April 2023 8:43 AM IST (Updated: 8 April 2023 11:00 AM IST)
- ஒரு சில மாணவ-மாணவிகளுக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.
- விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்த பிளஸ்-2 கணித தேர்வில் ஒருசில மாணவ-மாணவிகளுக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
X