என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டரக்கோட்டை  தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர்அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி யதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீ ரின் அளவும் அதிகரிக்க ப்பட்டது.

    அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவி டப்பட்டு ள்ளதால் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது ப்பணி த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பொது ப்பணித்து றை, வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் மூலம் கண்காணி ப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டு ள்ளது. தொட ர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொது ப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×