என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
செய்யாற்றில் 5-வது நாளாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
Byமாலை மலர்8 Dec 2024 2:26 PM IST
- தங்கச்சேரி தடுப்பணையில் 5-வது நாளாக 9 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடுகிறது.
- விவசாயம் செய்துள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், ஜவ்வாது மலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி - மாகரல் இடையே செல்லும் தங்கச்சேரி தடுப்பணையில் 5-வது நாளாக 9 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடுகிறது.
அப்பகுதியில் உள்ள விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
X